திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் செயலிழந்ததில், நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயாளி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தொடக்க நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவச் சேவைகளை வழங்கக்கூடியவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனையின் அவசர சேவைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது மட்டுமின்றி, மாற்று ஏற்பாடுகளும் முறையாகச் செய்யாததால், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவம் பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயாளி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத் தடையால் நோயாளி உயிரிழந்ததைவிடக் கொடுமை, அதை மூடிமறைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.