அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார்.
ஒருவார கால பயணமாக நாசாவின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூருவில் நாசாவிற்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான பூமியைக் கண்காணிக்கும் கூட்டுப் பணியான நிசார் விண்கலம் 2024 இல் ஏவுவதற்கான சோதனை மற்றும் ஒருங்கிணைப்புக்கு உட்பட்டுள்ளது.
அதனை அவர் பார்வையிடலாம் என தெரிகிறது. தமது இந்திய பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியா விண்வெளியில் முன்னணியில் உள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான பயணத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒருவார காலம் உள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான வருகையை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.