தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், வாரங்கலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தெலுங்கானாவில் பாஜக வெற்றி பெறும் என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வாரங்கலில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பிஆர்எஸ் மற்றும் காங்கிரசை தோற்கடித்து பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், ஊழல், மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.