சென்னை செனாய் நகர், திரு.வி.கா பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள, X பதிவில், செனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் அமைந்துள்ளதிரு.வி.கா.பூங்காவை 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணிகளுக்காக க்யூஸ் கார்ப் நிறுவனத்திற்கு ரூ.4.59கோடி மதிப்பில் ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த நிறுவனம், திரு.வி.கா.பூங்காவில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகளை பராமரிப்பதில், அனைத்து குழாய்கள், வால்வுகள், பம்புகள் மற்றும் தொட்டிகளில் வழக்கமான ஆய்வுகள், சுத்தம் செய்தல்மற்றும் பராமரித்தல், அத்துடன் ஏதேனும் சேதங்கள் அல்லது செயலிழப்புகள் இருந்தால் அதனைஉடனடியாக சரிசெய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும். குறிப்பாக, தண்ணீரின் தரம்பராமரிக்கப்படுவதையும், மாசுபாட்டின் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா எனத் தொடர்ந்துசோதிக்கப்படுவதையும், எந்த இடையூறுகள் அல்லது பாதுகாப்பு ஆபத்துக்களைத் தடுக்க அனைத்துஅமைப்புகளும் சரியாகச் செயல்படுவதையும் இந்த நிறுவனம் உறுதிசெய்யும். இப்பணிகள்யாவும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் டி.அர்ச்சுனன் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (வடிவமைப்பு), மற்றும்க்யூஸ் கார்ப் நிறுவனத்தின் மாநில தலைவர் (தமிழ்நாடு) ரமேஷ்கார்த்திக் குணசேகரன் ஆகியோர்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் டி.ஜெபசெல்வின் கிளாட்சன், ஆலோசகர் தங்கராஜ், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின்உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.