கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நாள் மற்ற கார்த்திகை நாளைவிட மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்துக்களின் புனித பண்டிகை ஆகும்.
இந்த நாளில், பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் அகல் விளக்குகள் மூலம் தீபம் ஏற்றுவது வழக்கம். அதுபோல, ஆலயங்களிலும், முக்கிய இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் 450 ஆண்டு பழமையான பழங்குடியினரின் பாரம்பரிய கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான அறிவிப்பு, ஒவ்வொரு கிராமங்களிலும் தண்டோரா மூலம் அறிவித்தனர். அதன்படி, 350 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும், ஊர்த் தலைவர்களும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.
அப்போது, ஊரின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மிக உயரமான கம்பத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை நோக்கி அனைவரும் மனம் உருக வழிபாடு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, படுகர் இனமக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.