தமிழ்நாட்டில் நேற்று 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.