உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.
இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு உலக நாடுகள் இணைந்து எதிா்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் உமிழ்வைக் குறைப்பது மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை கையாள்வதில் வளரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தியும், காலநிலை மாற்றம் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு எகிப்தில் 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாநாடு நடைபெற்றது. அப்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.