தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுவின் தெற்கு வெட்டுதல் என்ற நிகழ்வை எதிர்கொள்ளும் வகையில், வரும் 12-ம் தேதி முதல் பிரிட்ஜிங் சவுத் என்ற பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் மேற்கொள்ள உள்ளதாக பிரஜ்னா பிரவாவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினருமான ஜே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நந்தகுமார், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஆனால், பிரிவினை மனப்பான்மை கொண்ட சிலர் பாரதத்தை பிளவுபடுத்த முயன்றனர்.
பாரதம் பிளவுபடும் என்று ஒரு சில அரசியல் கட்சிகள், சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பேசி வருகின்றனர். அதை நோக்கிச் செயல்பட்டுள்ளனர். ஒரு சில அரசியல் கட்சிகளும், அறிவு ஜீவிகளும் தெற்கே வெட்டுவது என்று பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இது உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு பிரிவினையின் பின்னணியில் இது நடத்தப்படுகிறது. இதற்காவே, அவர்கள் சில விசித்திரமான விளக்கங்களையும் அளித்துள்ளனர்.
பிரிவினைவாதிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் முழு முயற்சியுடன் செயல்படும்.
அதேபோல, டெல்லி தெற்கை புறக்கணிக்கிறது என்றும், சென்னை, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் அதிக வருவாயை வழங்குகின்றன. ஆனால், குறைந்த வளர்ச்சியை பெறுகின்றன என பொய் பிரசாரம் செய்கின்றனர்.
எனவே, ஆதாரமற்ற பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இயற்கையாகவும், சாமானிய மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இது போன்ற சித்தாந்தத்தை அறிப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்.
தென் மாநிலங்களில், பிரிட்ஜிங் சவுத் பிரசாரத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன் உள்ளிட்டோர் இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வர்கள்.
இதேபோல, வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வடக்கிழக்கு பாலம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பாரதம் முழுவதும் இதுபோன்ற முக்கிய பிரசாரங்களை நடத்த உள்ளோம் என்றார்.