கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே வட்டம் பகுதியில் வீட்டின் சமையலறையில் அருகே இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் லாகமாக பிடித்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அழகியமண்டபம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வீட்டின் சமையலறையில் பின்புறம் வித்தியாசமான நிறத்தில் பாம்பு ஒன்று சென்றதை வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.
இதைக்கண்ட குமார் குடும்பத்தினர் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாக இருக்கலாம் என அஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பதுங்கி இருந்த, பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.