பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
2,953 கிலோ வெடிமருந்து வைக்கோல் போர்வையில் மறைத்து வைக்கப்பட்டு கோவைக்கு எடுத்து செல்லப்பட்டதை, சேலத்தில் போலீசார் பிடித்தனர்! விசாரிக்கின்றனர்! வண்டியில் என்ன இருக்கிறது என சோதித்து கண்டுபிடித்தது போலீஸ் கான்ஸ்டெபிளின் சாதாரண செயல்! இப்போது சிக்கிக்கொண்டது என தெரிந்தவுடன் அனுப்பியவர்கள் யாரிடம் தொடர்புகொண்டு என்ன பேசுவார்கள்? இவர்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
இதே கோயம்புத்தூரில் 2022 ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக கோயிலில் வெடிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிபொருள் நிரப்பிய கார் ஒன்று கோட்டீஸ்வரன் கோயிலின் முன்பே யாராலும் இயக்கப்படாமல் வெடித்துவிட்டது!
தமிழக முதலமைச்சரும் போலீஸ் உயர் அதிகாரியான டி.ஜி.பி அவர்களும் இது வெறும் கேஸ் சிலிண்டர் வெடிப்புதான் என சாதித்தார்கள்! ஆனால் வழக்கினை N.I.A எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டு விசாரித்தது!
30 க்கும் மேலான இஸ்லாமிய மதவாத பயங்கரவாதிகளோடு தொடர்பு இருப்பதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! இன்றுவரை முதலமைச்சரும் திமுகவினரும், D.G.P அவர்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை நாங்கள் தவறாக அறிவித்துவிட்டோம், அது ஹிந்துக்களை குறிவைத்து செயல்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத திட்டம்தான் என சொல்லவில்லை!
1998 ல் கோவையில் பாஜகவின் தேசிய தலைவர் அத்வானி உரையாற்றவிருந்த இடத்தை சுற்றி, கோவைக்கு வந்துவிட்ட தலைவர் அவர்கள் மேடைக்கு வரவிருந்த வேளையில், 12 கிலோமீட்டர் சுற்றளவில் 11 இடங்களில் 13 குண்டுகள் வெடிக்கப்பெய்யப்பட்டன!
46 பேர் சாகடிக்கப்பட்டனர்! 2000 பேர் காயமடைந்தனர்! அந்த குண்டு வெடிப்பின்போதும் திமுகதான் ஆட்சியில் இருந்தது! அல் உம்மா என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புதான் செய்ததாக கண்டறியப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டன!
அந்த தண்டணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று இன்றுவரை திமுக குரல் கொடுத்து வருகிறது! குண்டுவெடிப்பில் இறந்துப்போனவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் திமுக வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை!
சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பின்போதும் திமுக ஆட்சிதான்! திமுக இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை!
குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதுதான் அரசியலில் லட்சியம் என ஆளுங்கட்சி நடந்துகொள்கிறது! தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக விளங்குவோருக்கும் அத்தகைய நோக்கம் இருப்பதாகவே மேடைகளில் பேசிக்கொள்கிறார்கள்! வெளிப்படையாகவே சொல்கிறார்கள்!
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தமட்டில், பயங்கரவாதத்திற்கும் குறிப்பிட்ட சமூகத்திற்கும் சம்மந்தம் இருப்பதாக கருதவில்லை! மத வழிபாடும் மத அடிப்படையிலான ஒற்றுமையும் மத அடிப்படையிலான பயங்கரவாதமும் ஒன்றல்ல! என்பதுதான் பாஜக கொள்கை! பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை!
ஆனால் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள், மத வழிப்பாடு, மத ஒற்றுமை, மத அடிப்படையிலான பயங்கரவாத செயல்பாடு இவை அனைத்தையுமே இணைத்து பார்ப்பதாகவே தோன்றுகிறது! எனவேதான் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என துடிக்கிறார்கள்!
குறிப்பிட்ட சமூகம் என வந்துவிட்டால் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் பயங்கரவாத செயல்பாடுகளையும் ஆதரிக்கிறார்களா என்னும் கேள்வி எழுகிறது! இத்தகைய கேள்வி நடு நிலையாளர்கள் மத்தியில் எழும் வகையில் சில கட்சிகள் நடந்துக்கொள்வது நாட்டுக்கு நல்லதல்ல!
குறிப்பிட்ட சமூகம் மட்டுமல்ல, முன்னால் பிரதமர் ராஜூவ் காந்தி அவர்களை பயங்கரமாக கொலை செய்தவர்களையும் விடுதலை செய்யுங்கள் என்றுதான் சில கட்சிகள் தமிழகத்தில் கோரிவருகின்றனர்!
பயங்கரவாதிகளை விடுதலை செய்யுங்கள், அவர்கள் சிறையில் இருந்தது போதும், இனி விட்டுவிடுங்கள் என்றெல்லாம் பரிந்துபேசும் திமுகதான் இப்போதும் ஆட்சியில் இருப்பதால், இப்போதும் கோவையை நோக்கி சென்றுள்ள இந்த பயங்கரவாதத்தை தமிழக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிப்படாது!
உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்! எனவே இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமையான N.I.A யிடம் ஒப்படைக்கவேண்டும் என திமுக நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்! திமுக எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யட்டும், ஆனால், மதம் சார்ந்த அரசியல் செய்யவேண்டாம் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.