ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை இந்திய அணிக்கு உதவியதாக இருக்கும் என சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், நான்காவது போட்டிக்கு அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ” ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்” என்று கூறினார். 23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.