நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது.
எனவே இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், தற்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.