லடாக்கில் இன்று 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக் பகுதியில் இன்று காலை 8.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நாட்டின் நில அதிர்வு மண்டலம் – 5 இல்
லே மற்றும் லடாக் பகுதிகள் அமைந்துள்ளன.
அதாவது, அவை பூகம்பத்தால் பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையில், மிக அதிக ஆபத்து நிகழும் பகுதியில் அமைந்துள்ளன. இதனால், லே மற்றும் லடாக் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.