நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா.இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றார் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பான புகாரின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர் கடந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், பாதியிலேயே வெளியேறினர். இந்நிலையில், நாடாளுமன்ற நெறிமுறை குழு 479 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை நாளை கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படுகிறது.
இதனிடையே ஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.