தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே இயக்கி வருகின்றன! அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் செய்தி! தங்களுக்கே வாக்களிக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கும் நோக்கத்தில் செய்திகளை திரித்துச்சொல்வதும், பொய்யாக சிலவற்றை சொல்வதும் அரசியல் தலைவர்களின் பணியாக உள்ளது!
சமீபத்தில் ஆளுநர் மசோதாவுக்கு கையெழுத்துப்போட மறுக்கிறார் என குற்றம்சாட்டி, சிறையில் கிடந்த ஒரு தண்டனை கைதி வெளியே ஜாமீனில் வந்து ஒரு பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை வாசலில் வீசினான்! இதே காரணத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு ஆளுநரை நோக்கி கற்களும் கம்புகளும் வீசப்பட்டன! தாக்கும் முயற்சி மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆளுநர் அலுவலகம் மூலம் காவல்த்துறையில் புகார் கொடுத்தும், முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அந்த புகாரை பதிவு செய்யவே இல்லை! காரணம், கற்களையும் கம்புகளையும் வீசியவர்கள் மர்மநபர்கள் அல்ல! காவல்துறைக்கு பெயர் தெரிந்த போராட்ட காரர்கள்தான்! காவல்துறையால் அனுமதிக்கப்பட்டு ஆளுநர் வரும் வழியில் கூடியவர்கள்தான் அந்த தாக்குதலை செய்தார்கள்! ஆளுநர் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை!
ஆளுநரை சட்டசபையில் வைத்துக்கொண்டு, அவரை கண்டிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் படிக்க முயன்றபோது, ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்! ஆளுநர் வெறியேறும்போது, பெரிய அளவில் ஊழல் செய்து மாட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடி “போயா” என பொறங்கையை வீசிச்சொன்னார்! முதலமைச்சரோ மேடையில் பேசும்போது ஆளுநரை “அவன்” என்று குறிப்பிட்டு சொன்னார்! இத்தனைக்கும் காரனம் ஆளுநர் கொடுக்கும் மசோதாக்களில் எல்லாம் ஒப்பமிட மறுக்கிறார் என்பதுதான்!
இன்நிலையில் மசோதாக்களில் ஆளுநர் ஒப்பமிடவில்லை அவரை உடனே ஒப்பமிடச்சொல்லுங்கள் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது மாநில அரசு! வழக்கு நடக்கிறது! வரும் 2023 டிசம்பர் 12 ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது! வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ”நீதிபதி இப்படி சொன்னார்” ”அப்படி சொன்னார்” என்றெல்லாம் தமிழக பத்திரிக்கைகளில் செய்திகள் வலம் வருகின்றன!
தீர்ப்பு எதுவும் வெளிவரவில்லை நீதிபதி சொன்னதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன! நாம் துவக்கத்தில் சொன்னதுபோல் தமிழக செய்தித்தாள்களும் ஊடகங்களும் உண்மையை திரித்துக்கூறுவதில் வல்லவர்கள்! “ஆளுநருக்கு நீதிபதி கண்டணம்!”, :உடனே கையெழுத்து போடச்சொல்லி கண்டிப்பு” என்றெல்லாம் கூட செய்திகள் வருகின்றன! இந்த பத்திரிக்கை செய்திகளை வைத்துக்கொண்டு நீதிபதி என்ன சொன்னார்? என நாம் ஒரு முடிவுக்கு வருவது தவறான முடிவாகிவிடும்! தீர்ப்பு என எழுதப்பட்டு அதை நீதிபதி படித்தால் மட்டுமே நம்மால் எடுத்துக்கொள்ள முடியும்! நீதிபதிகள் கருத்து சொன்னதாக சொல்வதெல்லாம் தீர்ப்பாகாது!
சரி முதலமைச்சரின் குற்றச்சாட்டுதான் என்ன என பார்ப்பதற்கு முன்பாக நாம் ஒரு விசயத்தை தெரிந்துக் கொள்ளவேண்டும்! ”ஒப்புதலுக்காகத்தான் ஆளுநரிடம் மசோதா அனுப்பப்படுகிறது! ஒப்பமிடுவதற்காக அல்ல! சட்டசபைகளில் இயற்றப்படும் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆளுநரின் ஒப்புதல் என்னும் சம்மதம் வேண்டும்! ஒப்பம் அல்ல!” சம்மதம் இல்லாமல் அவர் ஒப்பமிடக்கூடாது! சம்மதம் இல்லை என்றால், நிறுத்தி வைக்கலாம், மசோதாவை திருத்தச்சொல்லி அல்லது திரும்பபெறுமாறு திருப்பி அனுப்பலாம், அல்லது பரிசீலனைக்காக ஜனாதிபதிக்கு அனுப்பலாம்! இந்த மசோதாக்களை பொறுத்தமட்டில் ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிசீலனைக்காக அனுப்பியுள்ளார்!
நிறுத்தி வைக்கலாம் என சொல்லப்பட்டிருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் எத்தனை நாள் நிறுத்தி வைக்கலாம் என குறிப்பிடப்படவில்லை! அப்படி ஒரு கால நிர்ணயத்தை நீதிமன்றம் விதிக்க முடியாது! ஏனெனில் அப்படி காலம் நிணயிக்கப்பட்டால் அது சட்ட திருத்தமாகும்! அரசியலமைப்பு சட்டதிருத்தங்களை நாடாளுமன்றம் செய்ய முடியுமேயன்றி நீதிமன்றம் செய்யமுடியாது! இருக்கிற சட்டத்தில்தான் நீதிபதி தீர்ப்புக்கூற முடியும்! ஆளுநருக்கு அறிவுரையை நீதிபதி சொல்லலாம்! ஆனால் ஆளுநருக்கு நீதிபதி உத்தரவு போடமுடியாது! ஊழல் வழக்கில் விசாரணை கைதியாக ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் என்னும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட எப்படி நீதிமன்றத்தால் முடியவில்லையோ அப்படித்தான் இதுவும்!
மக்களால் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தமிழக பத்திரிக்கைகளில் வசனங்கள் உலா வருகின்றன! இந்த வார்த்தையை நீதிபதி சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்திகள் உள்ளன! நீதிபதியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லையே! மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதி சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்! அதே அடிப்படையில்தான் ஆளுநர் தவறான மசோதாவை சட்டத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக்கிறார் அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கிறார்!
“நாமினி” என்னும் வார்த்தையை நீதிபதி பயன்படுத்தியதாக தமிழக பத்திரிகைகளில் பார்க்க முடிகிறது! ஆளுநர் ஜனாதிபதியின் நாமினிதான்! பிரதமரின் ஆலோசனையின்பெயரில்தான் ஜனாதிபதி ஆளுநரை நியமிக்கிறார்! ஜனாதிபதியும் பிரதமரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே!
நாட்டின் மிக உயர்ந்த மக்கள் பிரதிநிதிகளாக விளங்கும் ஜனாதிபதி பிரதமரின் பினாமிக்கு சட்டசபை பிரதிநிதிகளைக்காட்டிலும் அதிக அதிகாரம் இருக்கிறது! சட்டப்படியும் இருக்கிறது! தார்மீகப்படியும் இருக்கிறது! எனவே தான் இவர் ஆளுநர்! அதாவது அரசர்! சட்டசபை என்பது அரசரின் மந்திரிசபைதான்!
சரி, என்னென்ன மசோதாக்களை பாஸ் செய்ய ஆளுநர் மறுக்கிறார் என பார்ப்போம், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான இயக்குனராக ஊழல் வழக்கில் தண்டனைபெற்ற ஒருவரை நியமிப்பதுதான் ஒரு மசோதா! இது சரியல்ல என்று ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்! தமிழக அரசு ஊழல் அரசாக இருப்பதால் இத்தகைய மசோதாக்கள் நிறைவேறுகிறது! ஆனால் மத்திய அரசு ஊழலுக்கு எதிரான அரசாயிற்றே! ஆளுநர் மத்திய அரசின் பினாமிதானே எனவேதான் எதிர்க்கிறார்! ஆளுநர் செய்வது சரிதானே!
எஞ்சிய மசோதாக்கள் அனைத்துமே பல்கலைக்கழகங்களுக்கு முதல்வராக ஆளுநர் பதவி வகிக்கும் சட்டத்தை திருத்தி, பல்கலைக்கழகங்களுக்கு முதல்வராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதாக்கள்தான்!
பஸ் கண்டக்டர் டிரைவர் நியமணத்திலேயே பலகோடி லஞ்சம் வாங்கியதாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் போது, செந்தில் பாலாஜியை இதுவரை கண்டிக்காமல் அவரை மான்புமிகு அமைச்சராகவே வைத்துக்கொண்டிருக்கும் முதலமைச்சரை பகலைக்கழகங்களுக்கு முதல்வர் என ஆக்கினால், அனைத்து துணை முதல்வர்களையும் முதலமைச்சர்தான் நியமிப்பார்!
ஏற்கெனவே முதலமைச்சர் நியமித்த மந்திரிகள் அனைவருமே ஊழல்வாதிகளாக இருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களையும் ”ஊழல்” ஆட்சி செய்ய வேண்டுமா? இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என்கிறார், ஊழலை ஒழிக்கும் மத்திய அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்! ஆளுநர் செய்திருப்பது சரிதானே! திருடனிடம் சாவியை கொடுக்க வேண்டாம் என்கிறார் ஆளுநர்!
தப்பான மசோதாக்கள் சட்டமன்றத்தால் நிரைவேற்றப்பட்டால் அதை தடுத்து நிறுத்துவதற்காகவும்தான் ஆளுநர் இருக்கிறார்! ஊழல்வாதிகள் சொல்வதுபோல் படித்துபார்த்து எழுத்துப்பிழை திருத்தி ஒப்பம் செய்வதற்காக ஆளுநர் இல்லை!