திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்ததுறை அதிகாரி அங்கீத் திவாரியை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மீது லஞ்சப் புகார் கொடுத்த மருத்துவர் ,திமுக அமைச்சர்களுடன் இருக்கும் பிகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .
இது தவிர , புகார் கொடுத்த அந்த மருத்துவர் மீது 2018 ஆம் ஆண்டு சுமார் 2.4 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு நடைப் பெற்றது குறிப்பிடத்தக்கது .