ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி முடிவுகள்!
Sep 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி முடிவுகள்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

சிலி தலைநகர் சான்டியாகோவில் 10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3 வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனைகள் ஸ்குருஸ் நோவ் 5-வது நிமிடத்திலும், டிமோட் பிரேன்ஸ் 42-வது நிமிடத்திலும் கோலடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றனர்.

இந்திய வீராங்கனை அன்னு 47 வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பிலும், 51 வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பிலும் கோலடித்து 2-2 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினர்.

52-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீராங்கனை பொனாமி அஸ்ட்ரிட் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.

முடிவில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி காலிறுதிக்கு முன்னேறியது.

இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 2 வது வெற்றியை பெற்றதுடன் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடமும், கனடா 3 தோல்வியுடன் கடைசி இடமும் பெற்று காலிறுதி வாய்ப்பை இழந்தன.

Tags: indian womens hockey teamHockey
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பின்னடைவு!

Next Post

ப்ரோ கபடி லீக் : முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றி!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies