உலகக்கோப்பையின் மீது கால் வைத்து குறித்து ஏதும் பேசாமல் இருந்த மிச்சேல் மிட்சல் மார்ஷ் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆனால் ரசிகர்களுக்கு தோல்வியடைந்த வலியை விட மிகப்பெரிய வலி ஒன்றை ஒருவரின் செயல் ஏற்படுத்திவிட்டது.
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து, எடுத்துக் கொண்ட புகைப்படம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை பார்த்து இந்திய ரசிகர்கள் எவ்வாறு நீ அதில் கால் வைக்கலாம் என்று போர் கொடி தூக்கினர். நாங்கள் இந்த உலகக்கோப்பையை எப்படி எல்லாம் நினைத்தோம் தெரியுமா? அதில் போய் நீ கால் வைக்கிறாயே என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முகமது ஷமி அளித்த பேட்டியொன்றில் மிச்சேல் மார்ஷின் செயல் வேதனை அளித்தது என்று கூறினார். அதற்கு மிச்சேல் மார்ஷல் ஏதும் பதில் கூறாமல் இருந்த நிலையில் தற்போது மிட்சல் மார்ஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், கோப்பை மீது கால் வைத்தது எந்த அவமரியாதையான செயலும் இல்லை என்றும், கோப்பையை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் விளக்கம் அளித்துள்ளார்.