ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதாகும். இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் சோமநாத், நிலவின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி சந்திரயான்-3 விண்கலம் வரலாற்றுச் சாதனை படைத்தது.  இதனை சாத்தியமாக்க இஸ்ரோ இரவு பகலாக தொழில்நுட்பங்களை உருவாக்கியது.

இனி வரும் காலங்களிலும் எண்ணற்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கும். சந்திரயான்-3 மூலம் கிடைத்த வெற்றி எங்களுக்கு மேலும் உத்வேகம் அளித்திருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் அளவிற்கு இந்தியா தற்போது உயா்ந்திருக்கிறது.

அந்த வகையில், முதலில் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி சோதனை நடத்தப்படவுள்ளன. இதன் பிறகு, விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி 4 விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனைவரும் பயிற்சியை முடித்து விண்ணுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.

செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், செலுத்துவதற்கும் எண்ணற்ற தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2035-ல் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்கும் பிரதமரின் கனவை நனவாக்க இன்னும் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

நிலவுக்கு மீண்டும் செல்ல வேண்டும். வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள விண்கலங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமே வளமான எதிா்காலத்தை தீா்மானிக்கிறது. தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் மேம்படும் பொருளாதாரத்தால் நாம் உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்க முடியும்” என்றாா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

Tags: ISROSomnathgaganyaan
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

Next Post

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies