மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.
சுமாா் 77.82 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரஹலாத் படேல், பாஜக பொதுச் செயலா் கைலாஷ் விஜய் வா்கியா உள்பட மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களம் கண்டனா்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. பெரும்பான்மை தொகுதிகளில் கைப்பற்றிய அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இதனையடுத்து அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேள தாளங்கள் அடித்தும். ஆடிப்பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.