மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பாஜக 165 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 114 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 70 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது-
சத்தீஸ்கரில் பாஜக 56 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் முன்னணியில் உள்ளது.
3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.