கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!
Sep 12, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதன் மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான யெகோவா சாட்சிகளின் சபையைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை மாநாடு நடத்தினர். நிறைவு நாளான 29-ம் தேதி கூட்டுப் பிரார்த்தனைக்காக 2,000 பேர் கூடியிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் மற்றொரு பெண்ணும், 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல, அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தனர். இதனால் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த சூழலில், தொடுபுழா அருகே உள்ள கொடிகுளம் வண்டமட்டத்தைச் சேர்ந்த ஜான் (76) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார். களமச்சேரி குண்டு வெடிப்பில் சிக்கி 55 சதவீதம் தீக்காயமடைந்திருந்த இவர், ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதன் மூலம், களமச்சேரி குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சி பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: KeralaBomb blast7 dead
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

Next Post

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies