மிக்ஜாம் புயல் நிவாரண மையத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதியை பெண் ஒருவர், சரமாரியாகக் கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத பெருமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், வேளச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர், அமைச்சர் உதயநிதியை கண்டதும் ஆவேசம் அடைந்தார். அடிப்படையில் நான் ஒரு ஆசிரியை ஆனால், எனக்கு அடிப்படை வசதிகள் பல மணி நேரமாகக் கிடைக்கவில்லை. இதனால், நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். யாரும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என ஆங்கிலத்தில் வறுத்தெடுத்தார்.
ஆசிரியையின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்காமல், அமைச்சர்கள் நேருவும், மா.சுப்பிரமணியனும், உதயநிதியை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.