தமிழகத்தின் வெள்ள பாதிப்புக்கு இந்த நிர்வாகமே காரணம் - சந்தோஷ் நாராயணன்!
Apr 29, 2026, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் வெள்ள பாதிப்புக்கு இந்த நிர்வாகமே காரணம் – சந்தோஷ் நாராயணன்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் வெல்ல பாதிப்புக்கு தவறான நிர்வாகமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை.

10+ continuous years of flooding with weeks of at least knee deep water and power cuts for atleast 100 hours in our locality during every year is our harsh reality. This year is setting new benchmarks already. Funnily enough, it is neither historically a lake nor a 'low lying'…

— Santhosh Narayanan (@Music_Santhosh) December 5, 2023

இது ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.

இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: music director santhosh narayanan
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியை வறுத்தெடுத்த பெண்! – லைவ் ரிப்போர்ட்!

Next Post

திருவண்ணாமலையில் மகா தீபத் தரிசனம் இன்றுடன் நிறைவு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies