“ஆண்டாண்டுக்கு நிதி ஒதுக்குகிறீர்கள், நிலமை சரியாகவில்லை! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
சென்னையில் அண்ணாநகர் வேளச்சேரி கொளத்தூர் உள்ளிட்ட நகரங்கள் 1967 க்குப்பிறகு நிர்மானிக்கப்பட்டவை! இவை மட்டுமின்றி சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் சென்னையில் திமுக, அதிமுக ஆட்சியினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன!
கூவம் நதி, பக்கிங்காங் கால்வாய், அடையாறு ஆகியனவும் அவற்றின் கிளை கால்வாய்களும் சென்னை முழுமையும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிக்கும்!
கூவம் கழிவுநீர் கால்வாய் அல்ல அது சுத்தமான நீர் ஓடக்கூடிய ஒரு ஆறு! போரூர் ஏரி, அல்லிக்கேணி ஏரி, சேபாக் ஏரி, ஒட்டேரி, கொளத்தூர் ஏரி, ரெட்டேரி, கோயம்பேடு ஏரி, மதுரவாயல் ஏரி, தாம்பரம் ஏரி, செம்பாக்கம் ஏரி என 500 க்கும் அதிகமான ஏரிகள் இன்றைய சென்னை நகருக்குள் இருந்தன!
அவற்றில் 2 சதவிகித ஏரிகள் மட்டும் இப்போது 5 சதவிகித இடப்பரப்போடு பெயருக்கு இருக்கின்றன! எஞ்சிய 98 சதவிகித ஏரிகளையும், இருக்கும் ஏரிகளின் 95 சதவிகித பரப்பினையும் கபளிகரம் செய்தது திமுக அதிமுக ஆட்சியினர்!
அரசு நிலத்தில் கொட்டாய் போடுவது விற்பனை செய்வது, ஏரியில் கொட்டாய் போடுவது விற்பனை செய்வது, ஆற்றில் கொட்டாய் போடுவது விற்பனை செய்வது, ஏரியில் கொட்டாய் போடுவது விற்பனை செய்வது! இந்த கொட்டாய் போடும் வேலையையும் விற்பனை செய்யும் வேலையையும் தடுக்கவேண்டிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுப்பது! இதுதான் அன்றுமுதல் இன்றுவரை கழக அரசியல்வாதிகளின் வேலை!
விற்பனை செய்த கொட்டாய்க்கு மின் இணைப்பு வாங்கித்தர கமிஷன், குடிநீர் டேங் அமைத்துத்தர கட்டிங், சாக்கடை குழாய் பதிக்க கட்டிங், சாலை போட கட்டிங் இப்படியாக எதை எடுத்தாலும்கட்டிங்! அந்த வேலைகளுக்கு கான்ராக்டர்களும் இந்த அரசியல்வாதிகள்தான்! சாலை போட 10 லட்சம் ஒதுக்கீடு என்றால் 3 லட்சத்திற்குத்தான் போடுவார்கள்! 7 லட்சத்தை பங்கு போடுவார்கள்!
சாலை என்பது நடுப்பகுதியில் 6 அங்குலம் உயரமாகவும் இரு பக்கங்களிலும் சரிவாகவும் அமைக்கவேண்டும்! ஜல்லியெல்லாம் போட்டு முடித்தபின்பு, வெறும் தார் மட்டும் ஊற்றி தார் சாலை பளபளப்பாக இருக்க வேண்டும்! தண்ணீர் ஊற்றினால் இரு பக்கமும் ஓடும் சாலையில் தேங்காது! சாலை போட்டு முடிந்தபின்பு சாலையின் அஸ்திவாரத்தை தோண்டியும், மேல்பரப்பினை தண்ணீர் ஊற்றியும்தான் அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என்பது விதியாகும்!
மண்ணுக்கடியில் மூன்றடி நான்கு அடி ஆளத்திற்கு ஜல்லி போடப்படவேண்டும்! நெடுஞ் சாலையாக இருந்தால் 5 அடி 7 அடிக்கு கருங்கல் ஜல்லி போடப்படவேண்டும்! இத்தனைக்கும் என்ன செலவு ஆகுமோ அந்த செலவோடு 10 விழுக்காடு லாப தொகை கூடுதலாக வைத்துதான் ஒப்பந்தம் விடப்படும்! ஆனால் இவர்கள் பாதி தொகையை பாக்கட்டில் போட்டுவிடுவதால், மேலாக செம்மண்ணில் 6 அங்குல ஜல்லியை வைத்து அதம்மீது 3 அங்குலத்தில் கல்லியோடு தார் கலந்த கலவையை ஊற்றி, நடுவில் மேடு இல்லாமல் சமமாக மேடு பல்ளங்களோடு தோசைபோல போடுவார்கள்!
ஏற்கெனவே ஆறுகளும் கால்வாய்களும் ஏரிகளும், மூடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு விட்டன! தோசைபோல சாலைகளும் தெருக்களும்! மழை வந்ததும் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்கள் இப்போது காங்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டதால் தண்ணீர் பள்ளமாக இருக்கும் இடத்தில் தேங்குகிறது! சாலைகள் கரைந்து சேறுகளாக மாறுகின்றன!
சென்றவருடம் இப்படி தண்ணீர் தேங்கியதை சரி செய்ய 4000 கோடியை ஒதுக்கி செலவு செய்ததாக திமுகவின் மேயர் சொன்னார்! எவ்வித கணக்கும் மக்களிடம் தரப்படவில்லை! இந்த வருடம் மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில், 5-12-2023 அன்று ரூபாய் 5000 கோடியை பாஜக அரசிடம் கேட்கிறார் திமுக எம்.பி!
இந்த உண்மை தெரியாமல் மக்கள் அய்யோ இங்கே தண்ணீர் வந்துவிட்டது! அங்கே தண்ணீர் வந்துவிட்டது! இதை சரி செய்யுங்கள்! அதை சரி செய்யுங்கள்! என கூக்குரலிடுகிறார்கள்! அவர்களும் உடனே ஓடிவந்து பார்வையிட்டு மத்திய அரசிடமிருந்து பணம் வாங்கி அதில் கால்வாசியை செலவுசெய்து சீன் காட்டுவார்கள்! தோசை போல சாலை போடுவார்கள்! அந்த தோசை எத்தனை நாளைக்கு? விரைவில் தோசை கிழிந்துப்போனால் உடன்பிறப்புக்கு மகிழ்சிதான் மீண்டும் கட்டிங் போடலாம் அல்லவா?
புயல்வருகிறது என 10 நாளாக சொல்லிவருகிறது வானியல்துறை! 10 நாளாக ஏற்பாடுகளை செய்து தண்ணீரை தேங்க விடாமல் செய்திருக்க வேண்டுமல்லவா இந்த மந்திரிகள்! இதைக்கூட செய்ய முடியாத இந்த மந்திரிகள் வேறு எதற்குத்தான் இருக்கிறார்களோ என முட்டளவு தண்ணீரில் நின்றிருந்த ஒரு தாய் கேட்ட கேள்வி என் காதில் விழுந்தது!
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுக்கொண்டு முதலமைச்சரை இங்கு அழைத்துவாருங்கள்! அவரை வந்து பார்க்கச்சொல்லுங்கள்! இதற்குதான் ஓட்டு போட்டோமா? என கேட்கிறார்கள்!
“ஆண்டாண்டுக்கு நிதி ஒதுக்குகிறீர்கள், நிலமை சரியாகவில்லை! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! அப்படி என்றால் அடிப்படையில் சரி செய்யவேண்டியது இருக்கிறது, அது என்னவென்று அரசு பார்க்கவேண்டும்” என்று மக்கள் தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார்கள்!
கட்டிங் போடாத, கமிஷன் பார்க்காத, மக்கள் நலன் மீது உண்மையான அக்கரை உள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழக நிர்வாகத்தை கையில் எடுத்தால், சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருக்க என்னென்ன அடிப்படையாக செய்ய வேண்டுமோ அதை செய்து மாநகரைரும் அரசின் கஜான பணத்தையும் காப்பாற்ற முடியும்!
இப்போதுகூட பாருங்கள் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சென்னை நதிக்கரைகளில் 15, 20 மாடி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன! இந்த நிறுவனங்கள் அனைத்துமே அமைச்சர்களின் பினாமிகள் என சொல்லப்படுகிறது!
இந்த கூவக்கரை மற்றும் அடையாறு ஆற்றங்கரை குடியிருப்பில் குடியேறப்போவோரின் கார்கள் எங்கே ஓடும்? ஏற்கெனவே சென்னை நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறதே! இவர்களுக்கு குடிநீர் எங்கிருந்து உறிஞ்சப்படும்? ஏற்கெனவே 100 அடி 150 அடி என நிலத்தடி நீர்மட்டம் இறங்கி வருகிறதே! கழிவு நீர் எப்படி போகும்?
ஏற்கெனவே வீடு வைத்திருப்பவர் மாடியில் ஒரு போஷன் கட்ட வேண்டுமென்றால் ஆயிரம் கேள்விகளை கேட்டு இழுத்தடிக்கும் நிர்வாகம் இவர்களுக்கு 15 மாடிக்கும் 20 மாடிக்கும் எப்படி அனுமதி வழங்குகிறது?
ஆயிரம் கேள்விகள் எழுகின்றன தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தால்தான் நியாயமான கேள்விகளுக்கு பதில்காண முடியும்! எனத் தெரிவித்துள்ளார்.