பேரிடர் தடுப்பு நடவடிக்கை கணிசமாக மேம்பட்டுள்ளது மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் நாட்டில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மையின் முதன்மைப் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் உள்ளது. மத்திய அரசு, தேவைப்படும் இடங்களில், கடுமையான இயற்கைப் பேரிடர்களின் போது, தளவாட மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம், மாநில அரசுகளின் முயற்சிகளுக்குத் துணைபுரிகிறது.
பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கையின்படி, மாநில பேரிடர் மீட்புப் படையை உயர் நிலை பெறுவதற்கும் உயர்த்துவதும், அவற்றை திறன் கொண்டதாக்குவதும் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது.
மாநில அரசுகளுக்கு வசதியாக, தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு ஏற்ப அவர்களின் மாநில பேரிடர் மீட்புப் படையை திறன் மிகுந்ததாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பேரிடர் மீட்பு உபகரணங்களின் பட்டியலை மத்திய அரசு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் பல மடங்கு விளைவுகளை வழங்க, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
தென்மேற்குப் பருவமழைக்கு முன் ஏற்படும் பேரிடர் அல்லது வரவிருக்கும் பேரிடர் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான தயார்நிலையின் நிலையை மதிப்பாய்வு செய்வதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறையின் நிவாரண ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் வருடாந்திர மாநாட்டை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.
மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற பங்கெடுப்பாளர்களை உள்ளடக்கிய மாதிரிபயிற்சிகள், செயல்விளக்கங்களை தேசிய பேரிடர் மீட்புப் படை தொடர்ந்து நடத்துகிறது.
இந்த மாதிரி பயிற்சிகள், செயல் விளக்கங்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே பயனுள்ள ஒருங்கிணைப்புக்கான தளத்தை வழங்குகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை சமூகத் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொது விழிப்புணர்வு மற்றும் தயார்நிலைத் திட்டங்களில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்புப் படையின் திறனை வளர்ப்பதற்கு தேசிய பேரிடர் மீட்புப் படைதேவையான உதவிகளை வழங்குகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஉட்பட பிற பங்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசு ஒரு முதன்மையான நிறுவனத்தை அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படை அகாடமியை நாக்பூரில் நிறுவியுள்ளது.
தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியன்கள் மாநில பேரிடர் மீட்புப் படைபணியாளர்களுக்கு பல்வேறு பேரிடர் மேலாண்மை படிப்புகளில் பயிற்சியும் அளித்து வருகின்றன.
பேரிடர், வரவிருக்கும் பேரிடர் சூழ்நிலையை அடுத்து, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகளின் பயிற்சிகளின், உபகரணங்கள் மற்றும் முன்மொழிவு குறித்தும் ஆலோசனை வழங்குகிறது.
மத்திய அரசு தனது தொடர் முயற்சிகளால் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் தயார்நிலையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. பல்வேறு மட்டங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகளால், பேரிடர் தடுப்பு நடவடிக்கை கணிசமாக மேம்பட்டுள்ளது மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் நாட்டில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.