பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா,
இதற்காக தற்போதுள்ள சட்டங்களுக்கு துணையாகவும், தொண்ணூற்றி ஏழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை இணைப்பதன் மூலமும் முறையே 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்.எஸ்.சி.எஸ்) திருத்தச் சட்டம் மற்றும் விதிகள் – 2023 அறிவிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளன.
கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், அதில் நிதி முறைகேடுகளைத் தடுக்கவும் மேற்கண்ட திருத்தத்தின் மூலம் பல விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:-
• பல மாநில கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்களை சரியான நேரத்தில், முறையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற முறை சேர்க்கப்பட்டுள்ளது.
• உறுப்பினர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான செயல்முறையை வழங்குவதற்காக மத்திய அரசால் கூட்டுறவு குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படுவார்
• வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்குத் தகவல் வழங்க பல மாநிலக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தகவல் அலுவலர் நியமனம் செய்யப்படுவார்
• மத்திய பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்கள் குழுவிடமிருந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் மற்றும் வைப்புத் தொகை கொண்ட பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரே நேரத்தில் தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோசடி அல்லது முறைகேடுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து, அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
• வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக தலைமை பல மாநில கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும்.
• கணக்கியல் மற்றும் தணிக்கையில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கான கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலைகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
• பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுப்பதை மேம்படுத்தும் வகையில், வாரியக் கூட்டங்களுக்கு கோரம் எண்ணிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.