நிக்கி ஹேலி ஊழல்வாதி என குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல் அதே கட்சியின் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் களத்தில் உள்ளார். இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள் பங்கேற்ற விவாத நிகழச்சி அலபாமாவின் டஸ்கலூசாவில் நடைபெற்றது. அப்போது பேசிய விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி ஊழல்வாதி என குற்றம்சாட்டினார்.
நான் நிக்கி ஹேலியின் நம்பிக்கையை கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறேன் என தெரிவித்தார்.
நிக்கி ஊழல்வாதி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர்,இந்த பெண் உங்கள் குழந்தைகளை மரணத்தில் தள்ளிவிடுவார் என்றும், ஊழல் பணத்தில் வீடு வீடாக வாங்கி சேர்ப்பார் எனவும் விவேக் ராமசாமி குற்றம்சாட்டினார்.