இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் காஸா முனைப்பகுதி!
Oct 25, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் காஸா முனைப்பகுதி!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு காஸாவை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம் தற்போது தெற்கு காஸாவையும் சுற்றி வளைத்து தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல்  இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இப்போர் தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் நிர்வகித்து வரும் காஸா முனைப் பகுதி முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

வடக்கு காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில், அப்பகுதி முற்றிலும் சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. இந்த சூழலில், தெற்கு காஸாவிலும் தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. இதனால், அப்பகுதியிலுள்ள மக்களை இடம் பெயரும்படி இஸ்ரேல் வலியுறுத்தியது.

அதன்படி, தற்போது தெற்கு காஸாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தெற்கு காஸாவிலுள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இந்த சூழலில், தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான்யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் வீசப்படுகின்றன. அதில், “உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் இருக்கும் தங்குமிடங்களிலும், மருத்துவமனைகளிலும் இருங்கள். வெளியே வராதீர்கள். வெளியே செல்வது ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தின் தளபதி ஜெனரல் பிங்கெல் மேன் கூறுகையில், “தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருக்கிறோம். தெற்கு காஸாவில் உள்ள முக்கிய நகரமான கான் யூனுஸை முற்றிலும் சுற்றி வளைத்திருக்கிறோம்.

ஏற்கெனவே வடக்கு காஸாவில் ஜபாலியா, ஷுஜாய் பகுதிகளில் சண்டையிட்டு வருகிறோம். வடக்கு காஸா பகுதியில் பல ஹமாஸ் கோட்டைகளை கைப்பற்றினோம். தற்போது தெற்கில் ஹமாஸின் கோட்டை நகருக்கு எதிராக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

இந்த நிலையில், போர் முடிந்த பிறகு காஸா நகரின் பாதுகாப்பை இஸ்ரேல் இராணுவம் கையாளும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், “போருக்குப் பிறகு காஸா பகுதியின் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாளும்.

காஸாவில் இராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் படை ஆவண செய்யும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காஸா பகுதியின் இராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை.

ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி, எதிர்காலத்தில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காஸாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்” என்றார்.

Tags: WARIsraelKazaHamas
ShareTweetSendShare
Previous Post

சீனாவை கைகழுவும் ஆப்பிள்: இந்தியாவுக்கு ஜாக்பாட்!

Next Post

ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies