மிசோராம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமா நாளை பதவியேற்கிறார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தோ்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 8.57 லட்சம் வாக்காளா்களில் 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின.
இம்மாநிலத்துக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதைத் தொடர்ந்து, சோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வராக கட்சித் தலைவா் லால்டு ஹோமா தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை சந்தித்த லால்டு ஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அதன்படி, மாநில முதல்வராக லால்டு ஹோமா நாளை பதவியேற்கிறார்.
74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாவாா். மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.