370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Mar 15, 2026, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை 16 நாட்கள் நடைபெற்றது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

அதேபோல, அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்தத் தவறும் இழைக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாங்களை முன்வைத்தனர்.

இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்திருந்தது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான இரு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இத்தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: supreme courtjammu kashmirArticle 370
ShareTweetSendShare
Previous Post

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

Next Post

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies