2015ல் வந்த புயலைப்போன்ற புயல் இப்போது சென்னைக்கு வரவில்லை, காற்றுதான் வீசியது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
வங்கியில் 50 லட்சம் பணம் குறைகிறது! திருடப்பட்டிருக்கலாம், வங்கிக்கு வரவேண்டியது கணக்கில் மட்டும் வரவு வைக்கப்பட்டு வேறு எங்காவது சென்றிருக்கலாம்! மொத்தத்தில் அந்த பணம் 50 லட்சமும் எங்கோ இருக்கிறது என்பதுதான் உண்மை!
2015 ல் சென்னையில் புயல் வந்த பின்பு 4397 கோடி ரூபாயை சென்னை மாநகரின் கழிவுநீர் குழாய்கள் பராமரிப்பு மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிக்காக “அம்ருத்” திட்டத்தின்கீழ் மத்திய அரசு மாநில அரசிடம் தந்தது!
இந்த வருடத்தில் இப்போதைய கனமழை வருவதற்கு முன்பாகவே பேரிடர் நிதியாக ரூ.450 கோடியை மத்திய அரசு மாநில அரசிடம் வழங்கியது! 6-12-2023 அன்று தமிழக முதலமைச்சர், மத்திய அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்ததால், 7-12-2023 அன்று காலையில் சென்னை வந்த இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களும் தமிழக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களும் 450 கோடியை சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்காக வழங்கினர்!
இந்த 450+450=900 கோடி ரூபாய்க்கு இணையான 900 கோடி ரூபாயை மாநில அரசு தனது நிதியில் இருந்து சேர்த்து மொத்தம் 900 கோடி ரூபாயை வெள்ளப் பெருக்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்து திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் சட்டமாகும்!
சென்னை புறநகரில் பேரிடர் தடுப்பு கட்டுமானங்கள் என ஒரு புதிய திட்டத்தை வகுத்த மாநில திமுக நிர்வாகம் மத்திய அரசிடம் அனுமதியும் நிதியும் கோரியிருந்தது! அந்த தமிழக சென்னை மாநகர திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு அந்த திட்டத்திற்காகவும் 561.29 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது! மாநில அரசும் சென்னை மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணிக்காக 4000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது!
ஆகமொத்தம் 4397+900+900+561.26+4000=10758.29 பத்தாயிரத்து எழுநூற்றி ஐம்பத்தெட்டு கோடியே இருபத்தொன்பது லட்சம் ரூபாய்க்கான செலவு கணக்கினை மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு மக்களிடம் சமர்ப்பிக்கவேண்டிய பொருப்பு இருக்கிறது! ராணுவ அமைச்சர் அவர்கள் விரைந்துவந்து தற்சமயம் 7-12-2023 அன்று ஒப்படைத்த 450+561.29 கோடி பணத்தை தவிர்த்து எஞ்சிய தொகைக்கான கணக்கினை, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு சரிபார்த்து செய்த பணிகள் என்னென்ன மீதம் இருப்பது எவ்வளவு பணம் என கணக்கு காட்ட வேண்டும் என மக்கள் தலைவர் அன்ணாமலை வேண்டுகோள் வைத்துள்ளார்கள்!
காரணம் 2015ல் வந்த புயலைப்போன்ற புயல் இப்போது சென்னைக்கு வரவில்லை! காற்றுதான் வீசியது! மழைக்கூட 2015 ல் பெய்ததைவிட மிக மிக குறைவாகத்தான் பெய்துள்ளது! இந்த ஒரு நாள் சாதாரண மழைக்கே 2015ல் தேங்காத இடங்களில்கூட மழைநீர் தேங்கி சென்னைவாழ் மக்கள் தாங்கவொண்ணா துயரமடைந்தார்கள்! 7, 8 நாட்களாக தண்ணீர் வடியவில்லை!
15 செ.மீ மழையை தாங்கும் அளவில்தான் குழாய்கள் இருப்பதாக பேரிடர் மேலான்மை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்! அப்படியெனில் பழைய அமைப்புகள் தான் இருக்கிறது! புதிதாக எதுவும் பணி நடக்கவில்லை என்பது புரிகிறது! அப்படியெனில் ஒதுக்கப்பட்ட பணம் என்னாயிற்று என்பதுதான் மக்கள் தலைவர் அண்ணாமலையின் கேள்வியாக உள்ளது!
மக்கள் தலைவர் அன்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே பைல் 1 கணக்குப்படி 1,38,317 கோடியும் பைல் 2 கணக்குப்படி 5000 கோடியும், திமுக வின் ஊழல் சொத்தாக உள்ளது! சுமார் 300 பினாமிகள் திமுகவுக்கு உள்ளதாகவும் மக்கள் தலைவர் குறிப்பிட்டுள்ளார்!
பினாமிகளின் சொத்துக்கணக்குகள் இன்னும் கணக்கிடப்படவில்லை! கணக்கிட்டால் 10 லட்சம் கோடியை தாண்டலாம்! அந்த 10 லட்சம் கோடியில் சென்னை வெள்ள பேரிடருக்காக ஒதுக்கப்பட்ட பணமும் ஒரு பங்காக இருக்கிறதா? என்பதுதான் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் கேள்வியாகும்!
ஒதுக்கப்பட்ட தொகைக்கான பணி நடந்திருந்தால் தண்ணீர் தேங்கியிருக்காது! பணி நடக்கவில்லை என்றால் தொகை கணக்கில் இருக்க வேண்டும்! தொகையும் இல்லை, பணியும் இல்லை என்றால் அதன் பெயர் திருட்டுதான்!
துவக்கத்தில் ஒரு வங்கியின் கதையை இங்கே குறிப்பிட்டிருந்தேன்! வங்கியில் விசாரணையின்போது ஒரு பணியாளரின் சொத்தாக அந்த தொகை மாறியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது! வருமானத்திற்கு அதிகமாக சொத்து திமுகவினரிடம் அதிகமாக இருக்கும் சூழலில், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
மக்கள்தலைவரின் டி.எம்.கே பைல் கணக்குப்படி வருமானத்தை மிஞ்சிய திமுகவினரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சூழல் வரும்போது, மத்திய அரசு சென்னை வாழ் மக்களின் பேரிடர் தவிர்ப்பு பணிக்காக ஒதுக்கிய தொகையும் கிட்டிவிடும்!
அண்ணாமலை தலைமையில் தமிழக நிர்வாகம் அமையும் சூழலில், சென்னையில் பேரிடர் தவிர்கப்படும்! எவ்வளவு பெரிய மழை பொழிந்தாலும், புயல் வீசினாலும் பாதிக்காத வகையில் சென்னையில் கழிவுநீர் மழைநீர் போக்குப் பாதைகள் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கக்கூடிய வலுவான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கும்!
அப்படி ஒரு பாதுகாப்பான சென்னையை உருவாக்கும் நோக்கத்தில்தான் மாநில அரசிடம் செலவுக்கணக்கினை கேட்டுள்ளார் மக்கள் தலைவர் அண்ணாமலை எனத் தெரிவித்துள்ளார்.