மக்களைக் கவரும் செல்வாக்கோ அரசியல் புரிதலோ இல்லாதவர் ராகுல் காந்தி!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களைக் கவரும் செல்வாக்கோ அரசியல் புரிதலோ இல்லாதவர் ராகுல் காந்தி!

பிரணாப் முகர்ஜி மகள் புத்தகத்தில் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராகுல் காந்திக்கு மக்களைக் கவரும் செல்வாக்கோ, அரசியல் புரிதலோ இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததாக, அவரது மகள் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் பிரணாப் முகர்ஜி. நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். குடியரசுத் தலைவராகவும் இருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த சூழலில், பிரணாப் முகர்ஜி தொடர்பான ‘என்னுடைய தந்தை பிரணாப்’ என்கிற பெயரில், அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி புத்தகம் எழுதி இருக்கிறார்.

இவரும் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தான். இவர், பிரணாப் முகர்ஜி கூறியது மற்றும் டைரியில் எழுதி இருப்பது, மற்றவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அப்புத்தகத்தில், “காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது எனது தந்தை பிரணாப்புக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை.

ராகுல் காந்தி அடிக்கடி காணாமல் போய்விடுவார். அதுவும் முக்கியக் கட்டங்களில் மாயமாகி விடுவார் என்று பிரணாப் கூறியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக சில சம்பவங்களையும் விவரித்திருக்கிறார். தனது மகனை அடுத்த வாரிசாக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், மக்களைக் கவரும் அளவுக்கு செல்வாக்கோ, அரசியல் புரிதலோ ராகுல் காந்திக்கு இல்லை.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை எல்லாமே அவருக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது. இதனால், அவற்றின் உண்மையான மதிப்பு அவருக்குத் தெரியவில்லை. இவரா காங்கிரஸ் கட்சியை கரையேற்றுவார்? மக்களை ஈர்ப்பார் என்று பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

மேலும், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது, ஒருநாள் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அன்றையதினம் ராகுல் காந்தி தன்னைச் சந்திக்க மாலை நேரத்தில் பிரணாப் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், அவர் காலையிலேயே வந்துவிட்டார்.

பொதுவாக, நடைப்பயிற்சி மற்றும் பூஜையின்போது எந்தத் தொந்தரவும் இருப்பதை பிரணாப்அவர் விரும்பியது கிடையாது. ஆனாலும், வேறு வழியில்லாமல் ராகுலை சந்தித்தார். எனினும், இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு காலை, மாலை வித்தியாசம் தெரியாத ராகுலின் அலுவலகத்தில் உள்ளவர்களா பிரதமர் அலுவலகத்தை நடத்திவிட முடியும் என்று குறிப்பிட்டார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையேயான உறவு குறித்து கூறுகையில் “பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும், குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தொல்லையாக இருக்க மாட்டேன். எந்த உதவி தேவை என்றாலும் தைரியமாகக் கேட்கலாம் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக மோடியே என்னிடம் கூறினார்.

இருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் என்றாலும், இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வெளிப்படையான, நேர்மையான ஒரு வினோத நட்பு இருந்தது. இதனால்தான், பிரணாப் முகர்ஜியை எப்போது சந்தித்தாலும் அவரது காலைத் தொட்டு மோடி வணங்குவார். அது தனக்கு ஒரு திருப்தியை அளிப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: rahul gandhiDaughterPranab MukherjeeFormer PresidentBook
Share
Tweet
SendShare
Previous Post

கணக்கு கேட்கிறார் அண்ணாமலை!

Next Post

டிரம்ப் ஆதரவாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies