அமெரிக்காவின் கேபிடல் ஹில்ஸில் நடந்த தாக்குதல் தொடர்பு டிரம்ப்ஆதரவாளரும், முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி நூற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸின் இல்லமான கேபிடல் கட்டிடத்தைத் தாக்கினர். 2020 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஜோ பிடனின் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை சீர்குலைக்க இந்த கலவரம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு வாஷிங்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதி செய்தல் மற்றும் கொடிய ஆயுதத்துடன் தடைசெய்யப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டிரம்ப ஆதரவாளரும், முன்னாள் காவல் அதிகாரியுமான ஆலன் ஹோஸ்டெட்டருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் 12.5 ஆண்டுகள் தண்டனை விதிக்க வேண்டும் என வாதாடிய நிலையில் 135 மாதங்கள் அல்லது 11 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.