ஒடிசாவைச் சேர்ந்த டிஸ்டில்லரி குழுமம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரொக்கமாக 150 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒடிசா சேர்ந்த பௌத் டிஸ்டில்லரி நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி, கொல்கத்தா, புவனேஸ்வர், பலங்கிர் மற்றும் சம்பல்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதில் ரொக்கமாக ரூ. 150 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பணம் ஒன்று அல்லது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.