U -19 ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 174 ரன்கள் இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்கியது. முதல் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜம்ஷித் சத்ரன் மற்றும் வஃபியுல்லா தாரகில் களமிறங்கினர். 3 வது ஓவரில் வஃபியுல்லா தாரகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய சோஹில் கான் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜம்ஷித் சத்ரன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் வாய்ப்பை தவறவிட்டார். பின்பு களமிறங்கிய அக்ரம் முகமதுசாய் 20 ரன்களும் நுமன் ஷா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய முகமது யூனுஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். நமன் திவாரி 2 விக்கெட்களும், முருகன் மற்றும் முஷீர் கான் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி வெற்றி பெற 174 ரன்கள் இலக்காக உள்ளது.