தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் 9 -ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதில், ரேஷன் கார்டில், பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், புதிய அலைபேசி எண் சேர்த்தல் அல்லது பழைய அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், ரேஷன் கடை மாற்றம் உள்ளிட்டவை செய்யலாம்.
அதேபோல, அரிசி அட்டையை சர்க்கரை அட்டையாக மாற்றம் செய்தல், தொலைந்து போன பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு நகல். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகியவை செய்யலாம்.
மேலும், ஒருவர் ரேஷன் கடைக்குச் செல்ல இயலாத சூழ்நிலையில் அவருக்குப் பதில் வேறு ஒருவர் அவரது பொருட்களைப் பெறுவதற்கு அங்கீகாரச் சான்று பெறுதல், ரேஷன் கார்டை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.
இதற்கு, ஆதார் அட்டை, கேஸ் பில், வங்கி கணக்குப் புத்தகம், மின் இணைப்பு ரசீது, திருமணச் சான்றிதழ், அலைபேசி எண் உள்ளிட்டவை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு நாளில் தீர்வு கிடைப்பதால், இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.