கவாச் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளது! - அஸ்வினி வைஷ்ணவ்
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவாச் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளது! – அஸ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவையில் இன்று கவாச் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கவாச் என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பாகும். இது உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக உயர்ந்த பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.

தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் ரயிலை இயக்க லோகோ பைலட்டுக்கு கவாச் உதவுகிறது, மேலும் மோசமான வானிலையின் போது ரயிலைப் பாதுகாப்பாக இயக்கவும் இது உதவுகிறது.

பயணிகள் ரயில்களில் முதல் கள சோதனைகள் பிப்ரவரி 2016-ல் தொடங்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும், 3-வது தரப்பினரால் சுதந்திரமான பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையிலும், 2018-19 ஆம் ஆண்டில் கவாச் வழங்க மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கவாச் ஜூலை 2020-ல் தேசிய ஏடிபி அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கவாச் இதுவரை தென் மத்திய ரயில்வேயில் 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது தில்லி – மும்பை மற்றும் தில்லி – ஹவுரா வழித்தடங்களுக்கு (சுமார் 3000 வழித்தட கி.மீ) கவாச் டெண்டர்கள் வழங்கப்பட்டு, இந்த வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 6000 கி.மீ.க்கு சர்வே, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் விரிவான மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. கவாச் திட்டத்தை செயல்படுத்துவதை அதிகரிக்கவும், திறனை அதிகரிக்கவும் மேலும் ஓ.இ.எம்.களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புக்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. பாதுகாப்பின் அளவை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Tags: Ashwini Vaishnav
Share
Tweet
SendShare
Previous Post

ரேசன் கடைக்கு செல்ல இயலவில்லையா?

Next Post

கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies