காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!
Mar 15, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார்.

கலாச்சார மையங்களாகத் திகழும் வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது, வாரணாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.

இந்த நிலையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்வை மார்கழி மாதத்தின் முதல்நாளான வருகிற டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்தி மோடி வாரணாசிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்ஷித் பாரத் சங்கல்ப யாத்திரை கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.

பிறகு, டிசம்பர் 17-ம் தேதி தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ள நமோ காட் பகுதிக்குச் செல்கிறார். டிசம்பர் 18-ம் தேதி வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, தனது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அனேகமாக வாரணாசியில் உள்ள சேவாபுரி பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க காசி பகுதி பா.ஜ.க. தயாராகி வருகிறது.

Tags: PM Modikasi tamil sangamam
ShareTweetSendShare
Previous Post

நாளை மத்திய இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் சென்னை வருகை! – அண்ணாமலை

Next Post

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies