U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

U -19 ஆசியக் கோப்பை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜம்ஷித் சத்ரன் மற்றும் வஃபியுல்லா தாரகில் களமிறங்கினர். 3 வது ஓவரில் வஃபியுல்லா தாரகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சோஹில் கான் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜம்ஷித் சத்ரன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் வாய்ப்பை தவறவிட்டார். பின்பு களமிறங்கிய அக்ரம் முகமதுசாய் 20 ரன்களும் நுமன் ஷா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய முகமது யூனுஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். நமன் திவாரி 2 விக்கெட்களும், முருகன் மற்றும் முஷீர் கான் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். 3 வது ஓவரில் ஆதர்ஷ் சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருத்ரா படேல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து உதய் சஹாரன் மாக 20 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து முஷீர் கான் களமிறங்கினார். முஷீர் கான் மற்றும் அர்ஷின் குல்கர்னி இவர்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இதில் அர்ஷின் குல்கர்னி 105 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முஷீர் கான் 53 பந்துகளில் 48 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 38 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பஷீர் அகமது, வஹிதுல்லாஹ் சத்ரன் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

Tags: CricketIndiaAfghanistanindia wonasia cup u 19
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!

Next Post

மிசோரம் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies