கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள புராரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தேசிய மாநாட்டைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடக்கி வைத்தார்.
அதன் பிறகு பேசிய அவர், “கல்வி என்பது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கூடதான். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழல், வாரிசு அரசியல் முறை, சாதி வெறி ஆகியவை மாற்றப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இளைஞர்களுக்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது. உலகமே பல்வேறு பிரச்சினைகளுடன் தீர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் சக்திதான் நாட்டின் முதுகெலும்பாகவும், அதன் வளர்ச்சிக்கும் உந்துதலாக உள்ளது” என்று தெரிவித்தார்.