மோசமான சாலைகளால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதி கிராமங்களில் சுமார் 65 ஆண்டுகாலமாக இயங்கி வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் பேச்சிபாறை முதல் கோதையாறு வரை 48 ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் மற்றும் மின்வாரிய குடியிருப்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது.
இந்த பகுதிக்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
சாலை சரியில்லாத காரணத்தால் இந்த வழித்தடத்தில் சென்ற கோதையாறு கன்னியாகுமரி பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் நகர் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு செல்லவும் மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே சாலையை சீர் செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.