கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தீவிரவாத சதித்திட்டம் தொடர்பான வழக்கில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் ஒரு இடத்திலும், புனேவில் 2 இடங்களிலும், தானேயில் 40 இடங்களிலும் , இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக பயங்கரவாதிகள் முகமது ஷாரிக், சையது யாசின், ரசீன், நதீம் பைக் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.