மணலி ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து!
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணலி ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மணலி அருகே உள்ள தனியார் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மணலி அருகே உள்ள ஆண்டார் குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இரசாயன சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதைப் பார்த்ததுமே, அலறியடித்து வெளியே ஓடினர்.

இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மணலி, எண்ணூர், திருவொற்றியூர், மீஞ்சூர், தண்டையார்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் பல மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். டையர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதை அடுத்து, இராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயன்றபோது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை அடுத்து, மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல இலட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Fire accident
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. போர் நிறுத்த தீர்மானம்: வீட்டோவை பயன்படுத்தி முறியடித்த அமெரிக்கா!

Next Post

புயல் தாக்கிய 3 நாட்களில் 3500 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies