U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து ஜப்பான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜப்பான் அணியின் தொடங்க வீரர்களாக களமிறங்கிய ஆதித்யா பட்கே மற்றும் நிஹார் பர்மர் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி சென்றனர். அடுத்ததாக களமிறங்கிய ன் கேப்டன் கோஜி அபே 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக 31 வது ஓவரில் ஜப்பான் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 75 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக மல்ஷா தருபதி 3 விக்கெட்களை வீழ்த்தினார். கருகா சங்கேத் 2 விக்கெட்களை எடுத்தார். துவிந்து ரணதுங்க,விஷ்வ லஹிரு, தினுர கலுபஹன, விஹாஸ் தேவ்மிகா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
300 பந்துகளில் 76 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் புலிந்து பெரேரா மற்றும் ஹிருன் கபுருபண்டார களமிறங்கினர்.
இதில் புலிந்து பெரேரா 13 ரன்களிலும், ஹிருன் கபுருபண்டாரா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ருசண்டா கமகே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய இலங்கைஅணியின் கேப்டன் சினெத் ஜெயவர்தன 26 ரன்களும், தினுர கலுபஹன 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 13 வது ஓவரில் இலங்கை அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 76 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.