ரஜினி, மீனா இணைந்து நடித்த முத்து திரைப்படத்தின் ரீ ரிலீஸின் முதல் காட்சியை நடிகை மீனா இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் பார்த்து ரசித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1995 ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘முத்து’. இந்த திரைப்படம் தமிழகத்தில் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
முத்து பட ரிலீஸ் சமயத்தின் போது கிடைத்த அதே வரவேற்பு ரீ ரிலீஸுக்கும் கிடைத்து வருகிறது. இப்படத்தின் முதல் நாள் காட்சியைச் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகி மீனா உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்வின் போது ரசிகர்களுடன் பேசிய கே.எஸ் ரவிக்குமார் அடுத்ததாக படையப்பா திரைப்படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாகக் கூறினார். டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முத்து திரைப்படம் ரீ-ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.