2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி மரங்களை நட வேண்டும் என உலக பொருளாதார அமைப்பின் இலக்கின் ஒரு பகுதியாக அதானி குழுமம் 2 கோடியே 90 லட்சம் மரங்களை நட்டுள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நடுவதே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டும் சிமெண்ட் துறையில் நிலையான புரட்சியை முன்னெடுத்து வருவதாக அதானி தெரிவித்தார்.
அதானி குழுமம் 2028 ஆம் ஆண்டுக்குள் அதன் சிமென்ட் உற்பத்தியில் 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு சக்தியூட்ட உறுதிபூண்டுள்ளது என்றும், இந்த லட்சிய இலக்கு, நிலையான சிமென்ட் உற்பத்தியின் உலகளாவிய அரங்கில் எங்களை முன்னணியில் நிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.