சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!
Sep 12, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 12:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கரில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதன் முடிவில் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடந்தது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிட்டப்பட்டது. இதில், ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்விடைந்தது. அதேசமயம், பா.ஜ.க. 54 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது.

ஆனால், முதல்வரை தேர்வு செய்வதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கிடையே குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே, 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங், முதல்வர் ரேஸில் முன்னிலையில் இருந்தாலும், அவருக்கு வயதாகி விட்டதால், புதுமுகத்திற்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரையோ அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரையோ முதல்வராக நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதற்கான காரணம் என்கிறார்கள்.

இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பழங்குடியின விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில், சர்பானந்த சோனவால், பா.ஜ.க. பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் அடங்கிய மேற்பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. மேலிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நியமித்தது.

இக்குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, தலைநகர் ராய்ப்பூரில் மாநில சட்டமன்றத்து்ககு புதிதாக தேர்வாகி இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இதன் பிறகு, சத்தீஸ்கரின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Tags: ChhattisgarhCM candidate
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவிற்கும் கொரியா குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

Next Post

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies