சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்கள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்த கட்டில்,மெத்தை, ப்ரிஷ், வாஷிங் மெசின், டி.வி உள்ளிட்ட பொருள்கள் தண்ணீர் மூழ்கி சேதம் அடைந்தது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஹெலிகாப்டரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். இதேபோல் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.
இந்நிலையில், ஆறு பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டஙகளில் ஆய்வு மேற்கொள்ளும். இதனைத்தொடர்ந்த அந்தக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.