மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள டிவொலி பகுதியில் சான் ஜியோவானி எவாஞ்சலிஸ்டா (San Giovanni Evangelista) மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையின் பிணவறை அருகே பற்றிய தீ மற்ற இடங்களுக்கும் மளமளவென பரவியது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மீட்புக் குழுவினர் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். சுமார் 200 நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரச சிகிச்சை பிரிவிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நான்கு பேரில் இருவர் மூச்சுத் திணறலால் இறந்ததாகவும், ஒருவர் மாரடைப்பால் இறந்ததாகவும், ஒருவர் தீக்காயங்களால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பிணங்களும் எரிந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சில இரசாயனங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags: ItalyFire accidenthospital fire accident
Share
Tweet
SendShare
Previous Post

காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!

Next Post

வெள்ள பாதிப்பு : நாளை சென்னை வருகிறது மத்திய குழு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies